/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விதை விற்பனை உரிமம் இல்லாமல் நாற்றங்காலில் விற்க கூடாது விதை ஆய்வு அதிகாரி எச்சரிக்கை
/
விதை விற்பனை உரிமம் இல்லாமல் நாற்றங்காலில் விற்க கூடாது விதை ஆய்வு அதிகாரி எச்சரிக்கை
விதை விற்பனை உரிமம் இல்லாமல் நாற்றங்காலில் விற்க கூடாது விதை ஆய்வு அதிகாரி எச்சரிக்கை
விதை விற்பனை உரிமம் இல்லாமல் நாற்றங்காலில் விற்க கூடாது விதை ஆய்வு அதிகாரி எச்சரிக்கை
ADDED : ஜன 24, 2025 06:52 AM
விழுப்புரம்: விதை விற்பனை உரிமமின்றி தனியார் நாற்றங்காலில் (நர்சரி) கன்றுகள் விற்க கூடாது என விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தனியார் நாற்றங்காலில் உற்பத்தி செய்யும் நாற்றுகள், நடவு பொருட்களின் தரம், இதற்கான விதைகள் பெறப்பட்ட இடம் ஆகியவை, விதை சட்டப்படி உறுதி செய்யப்படுகிறது. இதையொட்டி, தரமான பழ மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் பழமரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால் உரிமையாளர் எந்த விதை மூலம் அல்லது ஒட்டு மூலம் உற்பத்தி செய்கிறார் என்ற தகவலை கட்டாயம் பராமரிக்க வேண்டும். நாற்றங்காலில் விற்பனை செய்யப்படும் அனைத்து பழமரக்கன்றுகள், தென்னை நாற்றுகள், பணப்பயிர் மரக்கன்றுகளில் உண்மை தன்மை அட்டை கட்டாயம் பொருத்த வேண்டும்.
உண்மை தன்மை அட்டையில் நாற்றங்கால் உரிமையாளரின் கையெழுத்தோடு, முத்திரை எண், பயிர் ரகம், பதியம் செய்த நாள், குவியல், கன்று எண், நாற்றங்கால் விலாசம் மற்றும் உற்பத்தியாளரின் பெயர், முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு விற்பனை மேற்கொள்ள வேண்டும்.
குழித்தட்டுகளில் விற்கும் காய்கறி பயிர்களின் நாற்றுகளின் தரம், ஆதாரத்தை உறுதி செய்ய குழித்தட்டுகளில் ரகம், வீரிய ரகங்களின் விதை குறித்த தகவல்களை உள்ளடக்கிய உண்மை தன்மை அட்டை பொருத்தி விற்பனை செய்யப்பட வேண்டும்.
விற்கும் கன்றுகள், காய்கறி நாற்றுகளுக்கு விற்பனை ரசீது கட்டாயம் வழங்க வேண்டும்.
அனைத்து நாற்றங்கால் உற்பத்தியாளர்களும், விதை விற்பனை உரிமம் பெற்று, விதை சட்டங்களை கடைபிடித்து விற்பனை செய்ய வேண்டும். விதை விற்பனை உரிமம், இது தொடர்பான தகவல்களை விழுப்புரத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகி பெறலாம். இந்த நடைமுறையை பின்பற்றாத நாற்றங்கால் உரிமையாளர்கள் மீது விதை சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

