/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு மக்கள் போராட்டம்
/
சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு மக்கள் போராட்டம்
சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு மக்கள் போராட்டம்
சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு மக்கள் போராட்டம்
ADDED : அக் 23, 2024 05:41 AM

மரக்காணம்: மரக்காணம் அடுத்த சொரப்பட்டு கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையை சரி செய்யாததால் மக்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.
மரக்காணம் ஒன்றியம், சொரப்பட்டு கிராமத்தில் இருந்து ஆடவல்லிக்கூத்தான் வழியாக மரக்காணம் செல்லும் இரண்டு கி.மீ., சாலையும், முன்னுார் கிராமம் வழியாக திண்டிவனம் செல்லும் மூன்று கி.மீ., தார் சாலையும் கடந்த மூன்று ஆண்டுகளாக பழுதடைந்து ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இதை சீரமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. சாலை பல இடங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
சாலையை சரி செய்யக்கோரி சொரப்பட்டு கிராம மக்கள், நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், சாலையை சரி செய்யவில்லை எனில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.