/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு மாநில அளவிலான வீரர்கள் தேர்வு
/
தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு மாநில அளவிலான வீரர்கள் தேர்வு
தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு மாநில அளவிலான வீரர்கள் தேர்வு
தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு மாநில அளவிலான வீரர்கள் தேர்வு
ADDED : செப் 18, 2024 11:08 PM

திண்டிவனம்: திண்டிவனத்தில் சப் ஜூனியர் மாணவர்களுக்கான தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கான மாநில அளவிலான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஹேண்ட்பால் பெடரேஷன் ஆஃப் இந்தியா நடத்தும் 38வது சப் ஜூனியர் மாணவர்களுக்கான தேசிய ஹேண்ட்பால் போட்டிகள் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் வரும் அக்டோபர் 3 ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பங்கு பெற உள்ள தமிழக அணிக்கான வீரர்களை தேர்வு செய்வற்காக, தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கமும், விழுப்புரம் மாவட்ட ஹேண்ட்பால் சங்கமும் இணைந்து திண்டிவனம் புனித ஜோசப் குளுனி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.
இதில் தமிழகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் இதில் சிறந்த 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
செயலாளர் ராஜசேகர் தலைமையில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் வடிவேலன், சிவகங்கை மாவட்ட செயலாளர் கோபிநாத், காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் இணைந்து தேர்வு செய்தனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட தலைவர் முத்து ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் வடிவேலன், பாலசுந்தரம், பிரான்சிஸ் சாமுவேல் ஆகியோர் செய்திருந்தனர்.