ADDED : செப் 27, 2026 06:01 PM
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் இந்தாண்டிற்கான ‘அஸ்கோப் – 2026’ துவக்க விழா மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் அன்பழகன் தலைமை தாங்கி பேசுகையில், ‘மாணவர்கள் மின்னியல் மற்றும் மின்னணு துறை சார்ந்த கண்டுபிடிப்புகள். உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாதனங்கள் பயன்பாடு முன்பை விட தற்போது பன்மடங்கு பெருகியுள்ளது. இந்த துறை சார்ந்த மாணவர்களாகிய நீங்கள் உங்களை தொழில்நுட்ப துறைகளில் என்னென்ன தேவைகள் உள்ளது என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி உங்களை மேம்படுத்தி கொண்டு உயர வேண்டும்’ என்றார்.
மாணவி மஞ்சுளாதேவி வரவேற்றார். துணை முதல்வர் ஜோசப் இக்னேஷியஸ் முன்னிலை வகித்தார்.
மும்பை, ஐ.ஐ.டி., முதல்வர் பாலசந்தர் சேட்டு, மாணவர்கள் தொழில்நுட்ப திறனை வளர்த்து கொள்வது பற்றியும், புதிய பொருட்களை கண்டுபிடிக்கும் தேவைகள், இதற்கான கற்பனை திறன் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
மாணவர் சபரிநாதன் நன்றி கூறினார்.
