/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏற்றுமதி வாய்ப்பு குறித்த கருத்தரங்கு விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
/
ஏற்றுமதி வாய்ப்பு குறித்த கருத்தரங்கு விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
ஏற்றுமதி வாய்ப்பு குறித்த கருத்தரங்கு விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
ஏற்றுமதி வாய்ப்பு குறித்த கருத்தரங்கு விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
ADDED : அக் 26, 2025 10:43 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து, தொழில்முனைவோருக்கான ஒரு நாள் கருத்தரங்கு நாளை (28ம் தேதி) நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
மாவட்ட அளவில் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும், கலெக்டரை தலைவராக கொண்டு அமைக்கப்பட்டுள்ள, மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள் குறித்த கருத்தரங்கு நாளை 28ம் தேதி காலை 10:00 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பாலம்மாள் காம்ப்ளக்சில் இக்கருத்தரங்கு நடக்கிறது. இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏற்றுமதி மேம்பாட்டு முகமைகள் மற்றும் ஏற்றுமதியுடன் தொடர்புடைய நிறுவனங்களின் வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.
அப்போது, மாவட்டத்தின் வேளாண் விளைபொருட்கள், கடல்சார் பொருட்கள், இண்டிகோ சாயம், களிமண், காகிதக்கூழ் மற்றும் பீங்கான் கைவினை பொருட்கள், மருந்துப் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், அதற்கான வழிமுறைகள் குறித்து கருத்துரை வழங்க உள்ளனர்.
ஆர்வமுள்ள விவசாயிகள், கைவினைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிகர்கள் கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

