/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு
/
ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு
ADDED : அக் 29, 2025 07:29 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து, மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோருக்கான ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
தொழில் முனைவோர்கள் மற்றும் உற்பத்தி பொருள்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், மேம்படுத்தும் விதமாக நடந்த கருத்தரங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள் தொடங்கி வைத்து பேசினார்.
இந்திய கைவினைஞர் ஏற்றுமதி மேம்பாட்டு முகமை தென்மண்டல அதிகாரி ஸ்ரீதேவி ஆலோசனை வழங்கி பேசினார். மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் நிர்வாகி ஜெயக்குமார் மற்றும் ஏற்றுமதி வல்லுநர்கள் பங்கேற்று, வேளாண் விளைபொருட்கள், கடல்சார் பொருட்கள், களிமண், காகிதக்கூழ் மற்றும் பீங்கான் கைவினை பொருட்கள், மருந்துப் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், அதற்கான வழிமுறைகள் குறித்து விளக்க உரையாற்றினர்.
கருத்தரங்கில், விவசாயிகள், கைவினைஞர்கள், தொழில் முனைவோர், வணிகர்கள் பங்கேற்றனர். கைவினை பொருட்களின் கண்காட்சியும் நடந்தது.

