தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மா சாகுபடி குறித்து கருத்தரங்கு

மா சாகுபடி குறித்து கருத்தரங்கு

மா சாகுபடி குறித்து கருத்தரங்கு


ADDED : ஆக 19, 2026 07:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 07:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி: மா சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடந்தது.

செஞ்சி அடுத்த ஊரணி தாங்கல் கிராமத்தில் விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை–மலைப்பயிர்கள் துறை சார்பில் மா சாகுபடியில் உயர் தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு கருத்தரங்கம் நடந்தது.

முன்னோடி விவசாயிகள் குத்து விளக்கேற்றினர். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

தோட்டக்கலை அலுவலர் சங்கவி பிரியா வரவேற்றார். பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் ஜமுனா, உதவி பேராசிரியர்கள் ஷீபாஜாஸ்மின், டாக்டர் மதன குமாரி, ஏற்றுமதி வல்லுனர்கள் கிருஷ்ணகிரி அசோக்குமார், போச்சம்பள்ளி விவேகானந்தன் மற்றும் பேராசிரியர்கள் கருத்துரை வழங்கினர்.

இதில், மா சாகுபடியில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள், அதை கையாளும் வழிகள், உயர் விளைச்சல் பெறும் வழிகள், மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து விளக்கினர்.

இதில் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விவசாயி சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us