ADDED : மார் 24, 2026 10:40 PM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கப்பியாம்புலியூர் ஏ.ஆர்.பொறியியல் கல்லுாரியில் 'விண்வெளி தொழில் நுட்பத்தில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள்' தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி அரங்கில் நடந்த கருத்தரங்கிற்கு ஸ்ரீ வெங்கடாசலபதி கல்வி அறக்கட்டளை தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். கல்லுாரி துணைத் தலைவர் குபேரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராமதாஸ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) மூத்த விஞ்ஞானி புருஷோத்தமன் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சித் துறையில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
