sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

யுனெஸ்கோ குழு வருகையால் செஞ்சி கோட்டை புதுப்பொலிவு! இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் முகாம்

/

யுனெஸ்கோ குழு வருகையால் செஞ்சி கோட்டை புதுப்பொலிவு! இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் முகாம்

யுனெஸ்கோ குழு வருகையால் செஞ்சி கோட்டை புதுப்பொலிவு! இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் முகாம்

யுனெஸ்கோ குழு வருகையால் செஞ்சி கோட்டை புதுப்பொலிவு! இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் முகாம்

1


ADDED : செப் 25, 2024 10:49 PM

Google News

ADDED : செப் 25, 2024 10:49 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி கோட்டையை உலக பாரரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கு யுனெஸ்கோ குழுவினர் நாளை ஆய்வு செய்ய வருகின்றனர். இதையடுத்து இந்திய தொல்லியல் துறையினர் பல்வேறு சீரமைப்பு பணிகளை செய்திருப்பதால் செஞ்சி கோட்டை புதுப்பொலி பெற்றுள்ளது.

தென் இந்தியாவில் உள்ள கோட்டைகளில் முழு அமைப்புடன் தரைக்கோட்டை, மலைக்கோட்டை இரண்டும் இணைந்த கோட்டையாக செஞ்சி கோட்டை உள்ளது. 1,200 ஏக்கர் பரப்பளவில் மூன்று மலைகளை இணைத்து 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களாலும், 80 அடி அகலம் உள்ள அகழிகளுடன், 800 அடி உயரத்திற்கு செஞ்சி கோட்டையை கட்டி உள்ளனர்.

செஞ்சி கோட்டையை முதன் முதலில் கி.பி., 1190 ல் கோணார் வம்சத்தினர் கட்டினர். கி.பி., 1320 வரை கோணார்கள் ஆட்சி நடந்தது. கி.பி., 1321 முதல் 1330 வரை குறும்பர்கள்; கி.பி., 1331 முதல் 1337 வரை ஒய்ச்சாலர்கள்; கி.பி.,1338 முதல் 1396 வரை விஜயநகர மன்னர்கள் ஆட்சி நடந்தது.

கி.பி., 1397 முதல் 1647 வரை நாயக்க மன்னர்கள், கி.பி., 1648 முதல் 1677 வரை முகமதியர்கள், கி.பி., 1678 முதல் 1697 வரை மராட்டியர்கள், கி.பி., 1698 முதல் 1749 வரை மொகலாயர்கள் ஆண்டனர்.

இதில், 1698 முதல் 1714 வரை ராஜா தேசிங்கின் தந்தை சொருப்சிங் மற்றும் ராஜா தேசிங்கு மன்னர்களாக இருந்தனர்.கி.பி., 1750 முதல் 1770 வரை பிரெஞ்சுக்காரர்களும், கி.பி., 1770 முதல் 1780 வரை ஆங்கிலேயர்களும் செஞ்சி கோட்டையை ஆட்சி செய்தனர்.

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது கி.பி.,1780ல் ஐதர் அலி செஞ்சி கோட்டையை தாக்கினார். ஆங்கிலேயர் அவரை முறியடித்தனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்தியதால், செஞ்சி கோட்டை வரலாற்று முக்கியத்துவத்தை இழந்தது.

யுனெஸ்கோவிற்கு பரிந்துரை


மத்திய அரசு சத்திரபதி சிவாஜி ஆட்சி செய்த கோட்டைகளை மராட்டியர்களின் ராணுவ கேந்திரமங்களாக இருந்தவை என்பதன் அடிப்படையில் 12 கோட்டைகளை உலக பராரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என, யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் மகாராஷ்டிராவில் உள்ள 11 கோட்டைகளும், தமிழகத்தில் செஞ்சி கோட்டையும் இந்த பட்டியலில் வருகிறது.

மத்திய குழு ஆய்வு


இந்திய அரசின் பரிந்துரையை ஏற்று 12 கோட்டைகளையும் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குழுவினர் நாளை (27ம் தேதி) செஞ்சி கோட்டையை ஆய்வு செய்ய வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசின் உயரதிகாரிகளும், இந்திய தொல்லியல் துறையின் உயரதிகாரிகள் குழுவினரும் வர உள்ளனர்.

இதனிடையே செஞ்சி கோட்டையில் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், பொறியாளர்கள் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

இதில் கல்யாண மகாலில் வெளிப்பகுதியில் வண்ணமடித்து அழகு படுத்தி உள்ளனர். அகழிகள், நீர் நிலைகளை சீரமைத்துள்ளர், பூங்காங்களையும், புல் தரைகளையும் அழகு படுத்தி உள்ளனர். கோட்டை குறித்த வரலாற்று தகவல்களையும் வெண்கலத்தால் ஆன கல்வெட்டில் வைத்துள்ளனர்.

செஞ்சி பேரூராட்சி பணியாளர்கள் மூலம் மாஸ் கிளினிங் செய்து கோட்டை பகுதியை துாய்மையாக மாற்றி உள்ளனர். இதனால் செஞ்சி கோட்டை புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது.






      Dinamalar
      Follow us