/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடியிருப்புகளில் தேங்கும் கழிவுநீர்
/
குடியிருப்புகளில் தேங்கும் கழிவுநீர்
ADDED : செப் 01, 2025 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம், பானாம்பட்டு பாதை காந்தி நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட கு டும்பங்கள் வசிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் கட்டுபாட்டின் கீழுள்ள இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் முழுவதுமாக வெளியேறி வருகிறது.
தற்போது கழிவுநீர், குளம் போல குடியிருப்புகளை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதோடு, அங்கு நோய் பரவும் சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது.
இது பற்றி, அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
கழிவுநீரை கடந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும் நிலையுள்ளதால், நகராட்சி அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.