/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சித்தேரிக்கரையில் கழிவுநீர், குப்பைகள் தேக்கம்: பொதுமக்கள் கடும் அவதி

ADDED : ஜன 17, 2025 06:35 AM

விழுப்புரம்: விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியில் குப்பைகள், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் நகராட்சி 7 வது வார்டுக்கு உட்பட்ட சித்தேரிக்கரை பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள விநாயகர் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகிறது.
இதனால், இந்த சாலையில் பெருக்கெடுத்து குளமாக தேங்கியுள்ள கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள பொதுமக்கள், நகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தேங்கியுள்ள குப்பைகளால் சித்தேரிக்கரை பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நகராட்சி அதிகாரிகள் சித்தேரிக்கரையிலுள்ள சுகாதார சீர்கேடுகளை சீர் செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.