/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனையில் கழிவுநீர் பிரச்னை
/
அரசு மருத்துவமனையில் கழிவுநீர் பிரச்னை
ADDED : ஜூலை 05, 2025 07:05 AM

விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கழிவுநீர் பிரச்னையை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 1,500 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். புற நோயாளிகள் பிரிவில் தினமும் 3,000 பேருக்கும் மேற்பட்டோர், சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன், இங்குள்ள கழிவறைகளுக்கு தண்ணீர் இறைக்கின்ற, இரு மோட்டார்கள் பழுதாகின. இதில் நேற்று காலை ஒரு மின் மோட்டார் சீரமைக்கப்பட்ட நிலையில், மற்றொரு மோட்டார் சரி செய்யப்படவில்லை.
மேலும் கழிவறைகளில், பெரும்பாலான குழாய்கள் மற்றும் கைப்பிடிகள் உடைந்துள்ளன. கடந்த மாதத்தில்
கலெக்டர் மருத்துவமனை ஆய்வின் போது, கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். ஆனால், அந்த பணியையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' இங்குள்ள கழிவறை, கழிவு நீர் வாய்க்கால் போன்ற அடிப்படை தேவைகளை பொதுப்பணித்துறை பராமரித்து வருகின்றது. இது குறித்து மாவட்ட நிர்வாகம், மருத்துவ நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.