ADDED : மே 02, 2025 05:02 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனத்தில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த டைலருக்கு புதிய தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் நேரு வீதியில் கூரை கொட்டகையில் நீண்ட நாட்களாக டைலர் கடை நடத்தி வருபவர் ஜப்பார், 65; மஸ்தான் எம்.எல்.ஏ., வை சந்தித்து, தனது தையல் இயந்திரம் பழுதாகிவிட்டதால், புதிய இயந்திரம் வாங்கி தரும்படி கோரிக்கை விடுத்தார்.
அதைனைத் தொடர்ந்து, மஸ்தான் எம்.எல்.ஏ., ஜப்பாருக்கு புதிய தையல் இயந்திரத்தை வழங்கினார்.
திண்டிவனம் நகர தி.மு.க., செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் பழனி, மணிமாறன், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ஷபியுல்லா,பாபு, மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
