ADDED : ஜூன் 01, 2025 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் வளர்பிறை சஷ்டி பூஜை நடந்தது.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில் வைகாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது.
பின், 11:00 மணிக்கு பாலாபிஷேகத்தைத் தொடர்ந்து, மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.