/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.20 லட்சம் செக் மோசடி சித்தா டாக்டருக்கு சிறை: திண்டிவனம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

ADDED : ஆக 28, 2025 02:48 AM
திண்டிவனம்: ரூ.20 லட்சம் செக் கொடுத்து மோசடி செய்த வழக்கில், கடலுாரை சேர்ந்த அரசு சித்தா டாக்டருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், வடஆலப்பாக்கம் ரோடு, ராமதாஸ் நகரை சேர்ந்தவர் சுப்ராயலு, 57; கே.ஆர்.எஸ்.பில்டர்ஸ் உரிமையாளர்.
இவர், கடலுார் செம்மண்டலம், ஜனலட்சுமி நகரை சேர்ந்த அரசு சித்தா டாக்டர் செந்தில்குமார், 55; என்பவருக்கு கடந்த, 2017ம் ஆண்டு, செம்மண்டலத்திலுள்ள சித்தமருத்துவமனை கிளினிக்கை புதுப்பித்து கட்டடம் கட்ட இந்தியன் வங்கி காசோலையாக ரூ.20 லட்சம் கடன் கொடுத்தார்.
பணத்தை கேட்ட போது, டாக்டர் செந்தில்குமார் கடந்த 2021ம் ஆண்டு, ரூ.20 லட்சத்திற்கான காசோலையாக, கடந்த, 2021ம் ஆண்டு, ஜூன் 6,ம் தேதியிட்டு, சுப்பராயலுவிடம் கொடுத்துள்ளார்.
இந்த காசோலையை திண்டிவனத்திலுள்ள கரூர் வைசிய வங்கியில் சுப்ராயலு செலுத்திய போது, செந்தில்குமார் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் பவுன்ஸ் ஆகிவிட்டது.
இதை தொடர்ந்து சுப்பராயலு சார்பில், திண்டிவனம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில், செந்தில்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது.
விசாரித்த நீதிபதி இளவரசி, செந்தில்குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் செந்தில்குமார், கோர்ட் மூலம் நிபந்தனைஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.