/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி அரசு பள்ளியில் சித்த மருத்துவ தின விழா
/
செஞ்சி அரசு பள்ளியில் சித்த மருத்துவ தின விழா
ADDED : ஜன 08, 2026 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் அகத்தியர் பிறந்த தினத்தை முன்னிட்டு சித்த மருத்து தின விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் செந்தில் பாலா வரவேற்றார்.
செஞ்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் அஜிதா ரமேஷ்பாபு, டாக்டர் சுமதி ஆகியோர் சித்த மருத்துவத்தின் சிறப்பு குறித்து விளக்கியும், மூலிகை செடிகள் குறித்து படங்களுடன் விளக்கி பேசினர்.
ஆசிரியர் வடிவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஏழுமலை நன்றி கூறினார்.

