/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிலம்பம் போட்டி பரிசளிப்பு விழா
/
சிலம்பம் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : நவ 02, 2025 10:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: தி ண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தில் சிலம்பாட்டம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பட்டணம் கிராமத்தில் உள்ள ஆர்.பி.எஸ்.சார்பட்டா சிலம்பாட்ட கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், தொடர்ந்து 3 ஆண்டுகளாக பள்ளிகளுக்கிடையேயும், முதல்வர் கோப்பையிலும் பங்கேற்று பரிசு பெற்றனர்.
இதேபோல், பட்டணம் கிராமத்தில் நடந்த சிலம்பம் போட்டியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் பரிசு வழங்கினார்.
அன்புசேகர், சிலம்பரசன், லட்சுமணன், போட்டி அமைப்பாளர் பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.

