/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
/
சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
ADDED : மே 24, 2025 09:34 PM

செஞ்சி : செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனையொட்டி நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. 8:00 மணிக்கு கொடியேற்றம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஹம்ச வாகனதில் சுவாமி வீதியுலா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறையினர், உபயதாரர்கள் பங்கேற்றனர். தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி பெரிய திருவடி எனப்படும் கருட சேவையும், 30ம் தேதி காலை 6:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. ஜூன் 3ம் தேதி விடையாற்றுதல் நடக்கிறது.