/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணி: எம்.எல்.ஏ., ஆய்வு
/
எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணி: எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : நவ 18, 2025 07:00 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எம்.எல்.ஏ., பார்வையிட்டு பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார்.
விக்கிரவாண்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான படிவங்களை பி.எல்.ஓ.,க்கள் வழங்கி வருகின்றனர்.
நேற்று தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா அனைத்து வார்டுகளிலும் பார்வையிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி படிவம் நிரப்புவதில் பொதுமக்களுக்கு எழுந்த சந்தேகங்களை விளக்கம் அளித்தார்.
பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், ஹரிஹரன், நகர செயலாளர் நைனா முகமது, துணைச் செயலாளர் பிரசாந்த்,இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்தி, துணை அமைப்பாளர் சிவா, மாணவரணி அமைப்பாளர் யுவராஜ்.
வர்த்தகர் அணி தலைவர் ராஜபாண்டியன், ஞானம், சைபுல்லா, சுகுமார், சிவஞானம், மகளிரணி பிருந்தா, ஷீலா, ஜெயந்தி, கவுன்சிலர்கள் ஆனந்தி, சுதா, ஒருங்கிணைப்பாளர் சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

