/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பணம் வைத்து சூதாடிய ஆறு பேர் கைது
/
பணம் வைத்து சூதாடிய ஆறு பேர் கைது
ADDED : பிப் 01, 2024 05:46 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சாலாமேடு பகுதியில் ரோந்து சென் றனர்.
அப்போது, சாலாமேடு ரயில்வே கேட் அருகே சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
அங்கு சூதாட்டம் ஆடிய சாலாமேடைச் சேர்ந்த ரங்கன் மகன் தமிழ்செல்வன், 40; தட்சணாமூர்த்தி மகன் குமரன், 45; மணி நகர் குப்புசாமி மகன் அருண்குமார், 34; அண்ணாநகர் பாவாடை மகன் ஆறுமுகம், 44; நரசிங்கபுரம் சேகர் மகன் முருகன், 40, வி.மருதூர் பத்மநாபன் மகன் செந்தில், 42; ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்து, பணம், புள்ளி தாள்களை பறிமுதல் செய்தனர்.