ADDED : செப் 12, 2026 09:31 PM
விழுப்புரம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் ‘செயற்கை நுண்ணறிவை அறிந்து கொள்ளுதல்’ என்ற தொழில்சார் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
கடந்த 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஐ.பி.எம்., மேம்பாடு மற்றும் நாஸ்காம் இணைந்து நடத்திய பயிற்சியில் 1,300 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் இளங்கோ தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி வரவேற்றார்.
நாஸ்காம் அமைப்பு தலைமை பயிற்றுநர் யஷ்ஜெயின், சுரபி ஜெயின் குழுவினர், செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி, இணையதள பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு பயிற்றுவித்தனர். வரலாற்று துறை தலைவர் கமலக்கண்ணன் நிறைவு விழாவில் பங்கேற்றார்.
வேதியியல் துறை தலைவர் அன்பரசன், வணிகவியல் துறைத் தலைவர் குமார், நிதியாளர் கிேஷார் உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஐ.பி.எம்., நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
