/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் கல்லுாரி சாலை சீரமைப்பு பணியில் மெத்தனம்
/
விழுப்புரம் கல்லுாரி சாலை சீரமைப்பு பணியில் மெத்தனம்
விழுப்புரம் கல்லுாரி சாலை சீரமைப்பு பணியில் மெத்தனம்
விழுப்புரம் கல்லுாரி சாலை சீரமைப்பு பணியில் மெத்தனம்
ADDED : ஜன 22, 2026 06:15 AM

விழுப்புரம்: விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கல்லுாரிக்கு செல்லும் சாலை பல மாதங்களாக சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மாணவிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து சாலமேடு எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கல்லுாரிக்கு சாலை செல்கின்றது. இச்சாலை வழியாக கல்லுாரி மாணவிகள் மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள நகர்களின் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளும் சென்று வருகின்றனர்.
இந்த சாலை கடந்த சில மாதங்களாக குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது. சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, ஜல்லிகள் கொட்டி சீரமைக்கும் பணி துவங்கியது.
அதன் மீது தார் சாலை போடப்படாததால் தற்போது ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே, கிடப்பில் போடப்பட்ட பணியை விரைந்து முடித்து தார்சாலை போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

