/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவண்ணாமலை செல்லும் மங்கலம் சாலை பணி மந்தம் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
/
திருவண்ணாமலை செல்லும் மங்கலம் சாலை பணி மந்தம் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
திருவண்ணாமலை செல்லும் மங்கலம் சாலை பணி மந்தம் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
திருவண்ணாமலை செல்லும் மங்கலம் சாலை பணி மந்தம் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
ADDED : டிச 09, 2024 06:53 AM

அவலுார்பேட்டை: , அவலுார்பேட்டையில் திருவண்ணாமலைக்குச் செல்லும் மங்கலம் சாலை பணி மந்தகதியில் நடப்பதால் தீப திருவிழாவிற்கு பக்தர்களின் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் வரும் 10ம் தேதி மகா ரத ஊர்வலமும், 13ம் தேதி தீப திருவிழாவும் நடைபெற உள்ளது. தேர் மற்றும் தீப விழாவைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம்.
விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டையிலிருந்து 23 கி.மீ., துாரத்தில் உள்ளது திருவண்ணாமலை. இதனால் அவலுார்பேட்டை வழியாக சேத்பட், வந்தவாசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, மேல்மலையனுார், வளத்தி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும் பஸ்கள், வேன்கள், டிராக்டர்கள் உள்ளிட்டவைகளில் பக்தர்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வர்.
இந்நிலையில், அவலுார்பேட்டையில் திருவண்ணாமலைக்குச் செல்லும் மங்கலம் சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் சிமென்ட் சாலை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், கடந்த மாதம் 3ம் தேதியிலிருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்று வழியாக புறவழிச்சாலையில் வாகனங்கள் செல்கின்றன.
தற்போதும் சிமென்ட் சாலைப் பணிகளில், ஒரு கல்வெர்ட் அமைக்கப்பட்டதோடு சரி, பணிகளில் மந்த நிலை தொடர்கிறது. இதனால் தீப விழாவைக் காணச் செல்லும் பக்தர்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படும்.
விழுப்புரம் மாவட்டத்தின் கடைசி பகுதியாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தின் துவக்க பகுதியாகவும் அவலுார்பேட்டை அமைந்துள்ளதால் இந்த சாலை வழியாக பல துறை சார்ந்த உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரும் செல்வர்.
பக்தர்கள் நலன் கருதி போக்குவரத்து சிரமத்தை தவிர்த்திட மங்கலம் சாலையில் பணிகளை விரைந்து மேற்கொண்டு முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.