ADDED : நவ 27, 2026 07:52 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் வேனில் தீ பிடித்து திடீர் புகை மூட்டம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர், மினி லோடு கேரியர் வாகனத்தில் வெங்காயம் வியாபாரம் செய்து வருகிறார்.
இன்று (நவ.,27) மதியம் வீட்டிலிருந்து மினி வேனில் வெங்காயத்தை ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கி வந்தபோது, வாகனத்தின் ரேடியேட்டர் பகுதி அதிக வெப்பமடைந்து தீப்பிடித்துள்ளது. உடனே அவர், திருச்சி நெடுஞ்சாலையில், வழுதரெட்டி காந்தி நகரில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நிறுத்தினார்.
அப்போது, திடீரென லோடு கேரியர் வாகனத்திலிருந்து அதிக இன்ஜின் சத்தத்துடன், பெரும் புகையுடன் தீப்பிடித்து எரிவது போல் புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன் மற்றும் அந்த வழியாக சென்ற மக்கள் அச்சத்தில் ஓடினர்.
இதனையடுத்து, அங்கிருந்த மெக்கானிக்குகள் உடனே வாகனத்தின் இன்ஜினை ஆப் செய்ததோடு, சிறிது நேர போராட்டத்திற்குப் பிறகு வாகனத்திலிருந்து வந்த புகை மூட்டத்தை தடுத்து நிறுத்தினர். அதிக வெப்பம் காரணமாக ரேடியேட்டர் பகுதியில் தீப்பிடித்து புகை வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
