/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம்
/
புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 13, 2024 04:02 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பேரூராட்சி சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் வி.சாத்தனுார் ஜெய் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.
புகையில்லா போகி பொங்கல் கொண்டாட வீட்டிலிருக்கும் பழைய பொருட்களை பேரூராட்சி துாய்மைப் பணியாளர்கள் வீட்டிற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்தது.
பேரூராட்சி செயல் அலுவலர் ேஷக் லத்தீப் , துணைச் சேர்மன் பாலாஜி, நியமனக்குழு தலைவர் சர்க்கார் பாபு, கவுன்சிலர் சுதா பாக்கியராஜ், இளநிலை உதவியாளர் ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர் ராஜா, மேற்பார்வையாளர் ராமலிங்கம், துப்புரவு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.