/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்பு
/
வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்பு
ADDED : ஜூலை 25, 2025 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார், ; கிளியனுார் அருகே வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.
கிளியனுார் அடுத்த பள்ளிதென்னல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமோகன். இவர் வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். நேற்று அவரது கோழி கூண்டுக்குள் புகுந்த நாக பாம்பு வீட்டிற்குள் புகுந்தது. இதனைப் பார்த்த ராஜமோகன், வானுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நான்கு அடி நீளமுள்ள நாக பாம்பை மீட்டு, காப்பு காட்டில் விட்டனர்.