/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாடிப்பள்ளம் ஊராட்சியில் சமூக தணிக்கை கிராம சபை
/
பாடிப்பள்ளம் ஊராட்சியில் சமூக தணிக்கை கிராம சபை
ADDED : டிச 23, 2025 04:22 AM
செஞ்சி: பாடிப்பள்ளம் ஊராட்சியில் தேசிய வேலை உறுதி திட்ட பணிகள் குறித்து சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் தாட்சாயணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் குபேர் வரவேற்றார். சமூக தணிக்கை பயிற்றுனர் அந்தோணி அருள்தாஸ் தணிக்கை அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், வேலை உறுதி திட்ட பணிக்கு வருபவர்களின் கடமை, உரிமைகள் குறித்து விளக்கினார். சமூக தணிக்கை தீர்மானங்களுக்கு பொது மக்கள் ஒப்புதல் வழங்கினர்.
இதில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சீதாராமன், துணை தலைவர் ஆனந்தன், நியமன ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், வார்டு உறுப்பினர்கள் ஆனந்தன், அன்பழகன், மஞ்சுளா, சக்திவேல், தீபா, ஒருங்கிணைப்பாளர் கோவிந்தம்மாள் பங்கேற்றனர்.

