/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சமூக நல்லிணக்க விழிப்புணர்வு முகாம்
/
சமூக நல்லிணக்க விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 08, 2025 11:51 PM

விழுப்புரம் : விழுப்புரம், வி.ஆர்.பி., மேல்நிலைப்பள்ளியில், சமூக நல்லிணக்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் சோழன் தலைமை தாங்கினார். மேற்கு இன்ஸ்பெக்டர் கல்பனா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கந்தசாமி வரவேற்றார்.
இதில், வன்கொடுமை தடுப்புச் சட்டம், போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு, இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, போக்குவரத்து விதிகள் குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜாராம் விளக்கினார்.
இதில், மேற்கு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு மகாராஜா, பள்ளி துணை தலைமை ஆசிரியர் பிரித்விராஜ் உடனிருந்தனர்.
பின்னர், தமிழ் வாசிப்பு திறனை ஊக்குவிப்பதற்காக மாணவ, மாணவிகளுக்கு 'தினமலர்' நாளிதழ் வழங்கப்பட்டது.