ADDED : ஆக 18, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: திருக்கோவிலுார் அடுத்த வி.சித்தாமூர் கிராம விவசாயிகளுக்கு மண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திண்டிவனம் அடுத்த ஓங்கூர் தட்சசீலா பல்கலைக் கழக மாணவர்கள், மண் பரிசோதனை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சி திட்டத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சியில், மண் பரிசோதனை, மண் வள மேலாண்மை மற்றும் பயிர் உற்பத்தியில் மண்ணின் பங்கு குறித்து விளக்கப்பட்டது.
