/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்திரை தாள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு
/
முத்திரை தாள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு
ADDED : அக் 25, 2025 06:52 AM
விக்கிரவாண்டி: தினமலர் செய்தி எதிரொலியாக, மாவட்டத்தில் முத்திரை தாள் தட்டுப்பாடு நீங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் முத்திரைத்தாள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்துார்பேட்டை ,சங்கராபுரம், சின்னசேலம் பகுதியில் உள்ள துணை கருவூலகங்களில் இருப்பில் இருந்த முத்திரைத்தாள்கள் வரவழைக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சார் கருவூலகங்களுக்கு, அவை அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து முத்திரைத்தாள் முகவர்கள் ஆன்லைன் மூலம் முத்திரைத்தாள்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.இதனால் கடந்த 20 நாட்களாக நிலவி வந்த தட்டுப்பாடு நீங்கியது.

