/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொத்து தகராறில் சித்தியை கொன்று வீசிய மகன் கைது
/
சொத்து தகராறில் சித்தியை கொன்று வீசிய மகன் கைது
ADDED : செப் 23, 2025 06:34 AM

அவலுார்பேட்டை; விழுப்புரம் மாவட்டம், துறிஞ்சிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல், இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி விருத்தாம்பாள், 50; திண்டிவனம், நடுவானந்தல் கிராமத்தில் வசிக்கிறார். இவரது மகன்கள் பாலகுரு, 28, பிரகாஷ்ராஜ், 25.
இரண்டாவது மனைவி ஜெயக்கொடி, 45; துறிஞ்சிப்பூண்டியில் வசிக்கும் இவருக்கு பூபாலன், 19, என்ற மகனும், புவனா, 17, என்ற மகளும் உள்ளனர். பழனிவேலுக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தை பிரிப்பதில், இவர்களுக்குள் தகராறு இருந்தது. நேற்று முன்தினம் இரவுமுதல் ஜெயக்கொடியை காணவில்லை. வளத்தி போலீசார் மற்றும் மேல்மலையனுார் தீயணைப்பு வீரர்கள் வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் தேடியதில், ஜெயக்கொடி உடல் கிடைத்தது.
விசாரணையில், வீட்டில் தனியாக இருந்த ஜெயக்கொடியை, சொத்துக்காக பிரகாஷ்ராஜ் தடியால் தலையில் அடித்து கொலை செய்து, உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசியது தெரிந்தது. பிரகாஷ்ராஜை போலீசார் கைது செய்தனர்.