ADDED : ஜன 28, 2026 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் கமலா நகரைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் முகமது இப்ராகீம், 26; டிரைவர். இவர், கடந்த 24ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து சம்சுதீன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

