/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஞ்சவடி கோவிலில் சவுமியா தரிசனம்
/
பஞ்சவடி கோவிலில் சவுமியா தரிசனம்
ADDED : ஆக 19, 2025 11:39 PM

வானூர் : பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சவுமியா தனது மகளுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பா.ம.க.,வில், நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தனித்தனியே பொதுக்குழுவை கூட்டினர்.
இதனிடையே அன்புமணி மனைவி சவுமியா ஏற்கனவே மயிலம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அதேபோன்று கடந்த வாரம் ராமதாசின் மனைவி சரஸ்வதி, அவரது மூத்த மகள் காந்திமதியுடன் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில் நேற்று காலை காலை 8:30 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த ஒழிந்தியாம்பட்டு, அரபலீஸ்வரர் கோவிலில் அன்புமணி மனைவி சவுமியா அவரது இளைய மகள் சஞ்சுத்ரா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரும் உறவினர்களுடன், பஞ்சவடியில் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள ராமச்சந்திரமூர்த்தி, சீனிவாச பெருமாள் ஆகிய சுவாமிகளை தரிசித்தனர்.
முன்னதாக இருவரையும், கோவில் அர்ச்சகர்கள் வரவேற்று அர்ச்சனை செய்து அவரிடம் கோவிலின் சிறப்புகள் எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, வானுார் பா.ம.க., ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.