/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தெற்கு மாவட்ட தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
/
தெற்கு மாவட்ட தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தெற்கு மாவட்ட தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தெற்கு மாவட்ட தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ADDED : மே 11, 2025 11:47 PM

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அகரம் சித்தாமூர் ஊராட்சியில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, முருகன், ஒன்றியக்குழு தலைவர் கலைசெல்வி முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் மங்கலம் பிரபாகரன் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றியக்குழு துணை தலைவர் வீரராகவன், நிர்வாகிகள் சக்கரவர்த்தி, ரவிச்சந்திரன், நாராயணசாமி, ஏரப்பன், பாலமுருகன், சிவராமன், சாந்தி, பழனி, கருணாகரன், புனிதா அய்யனார், ஒன்றிய கவுன்சிலர்கள் சேட்டு, சரவணன், கோபி, ஊராட்சி தலைவர் ஆஷா அற்புதராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம்.
விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சதீஷ், இளைஞரணி அமைப்பாளர் ரவிக்குமார், மாணவரணி அமைப்பாளர்கள் பாண்டிதுரை, ஜீவா, விவசாய அணி அண்ணாமலை, மகளிரணி நித்யா பிரபு, இளவரசி ஜெகன், தகவல் தொழில்நுட்ப அணி கதிரவன், கிளை செயலாளர்கள் நாகராஜன், முனியப்பன், நிர்வாகிகள் துரைகுமார், மணிகண்டன், சின்னராசு, தட்சணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.