/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கருங்காலிப்பட்டில் தெற்கு மாவட்ட தி.மு.க., பொதுக்கூட்டம்
/
கருங்காலிப்பட்டில் தெற்கு மாவட்ட தி.மு.க., பொதுக்கூட்டம்
கருங்காலிப்பட்டில் தெற்கு மாவட்ட தி.மு.க., பொதுக்கூட்டம்
கருங்காலிப்பட்டில் தெற்கு மாவட்ட தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : ஜூன் 28, 2025 01:01 AM

விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி, காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞர் அணி சார்பில் கருங்காலிப்பட்டு கிராமத்தில் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.முருகன், முருகன் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி, தலைமை கழக பேச்சாளர் எழும்பூர் கோபி சிறப்புரையாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய துணை சேர்மன் வீரராகவன், அரசு வழக்கறிஞர் பொன் கோபு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அரங்கநாதன், மருத்துவரணி துணை அமைப்பாளர் சபரிநாதன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தண்டபாணி, ஒன்றிய நிர்வாகிகள் பழனி, சுப்புராயன், கருணாகரன், சிவக்குமார், செல்வராஜ், மதன், புனிதா அய்யனார், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணியரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.