/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி பிரசார கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் 'அழைப்பு'
/
தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி பிரசார கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் 'அழைப்பு'
தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி பிரசார கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் 'அழைப்பு'
தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி பிரசார கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் 'அழைப்பு'
ADDED : ஜூன் 26, 2025 02:15 AM

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் நேற்று முதல் வரும் 30ம் தேதி வரை தெருமுனை பிரசார கூட்டங்கள் நடக்கிறது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதமசிகாமணி வெளியிட்ட அறிக்கை;
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் மற்றும் மாநில அரசின் 4 ஆண்டு கால சாதனைகள் விளக்கும் வகையில், நேற்று முதல் துவங்கிய தெருமுனை பிரசார கூட்டங்கள் வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்குகிறார். மண்டல பொறுப்பாளர் மற்றும் அமைச்சருமான பன்னர்செல்வம், பொன்முடி எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றுகின்றனர். திருக்கோவிலுார் ஒன்றியத்தில் துவங்கிய பிரசாரம், விக்கிரவாண்டி, மணம்பூண்டி, அரகண்டநல்லுார், காணை, முகையூர், விக்கிரவாண்டி, கோலியனுார் ஒன்றியங்களில் நடக்கிறது.
இதில், பேச்சாளர்கள் காசி விஸ்வநாதன், ஸ்ரீராம், வல்லபராசு, யாசர் அராபத், சேர்க்காடு கென்னடி, எழும்பூர் கோபி, அப்துல் வகாப், இன்பக்குமரன், கீர்த்தனா, ரவிச்சந்திரன், அஸ்வின் குமார், அன்பரசு, சரத்பாலா, சுஜாதா, பரசுராமன், ரோஜா பங்கேற்கின்றனர்.
இதில், எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், கற்பகம், தலைமை கழக வழக்கறிஞர் சுவை சுரேஷ், மாநில மகளிரணி பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் சலாம், செல்வராஜ் உட்பட பொதுக்கழு, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.