/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தெற்கு ரயில்வே பொது மேலாளர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு
/
தெற்கு ரயில்வே பொது மேலாளர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு
தெற்கு ரயில்வே பொது மேலாளர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு
தெற்கு ரயில்வே பொது மேலாளர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு
ADDED : டிச 26, 2025 05:58 AM

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சிங், சென்னை - காட்பாடி ரயில் பாதையை விரைவுபடுத்துவது குறித்து நேற்று முன்தினம் தனி ஆய்வு ரயில் மூலம் மாலை 6:45 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்தார்.
ரயில் நிலையத்தில் நடந்து வரும் அம்ரீத் பாரத் திட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு, திட்டப்பணிகளின் நிலவரங்கள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடந்து வரும் எஸ்கலேட்டர் உள்ளிட்ட புதிய கட்டுமான பணிககளை விரைந்து முடிக்கவும், புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினார்.
ஆய்வின் ஈடுபட்டிருந்த அதிகாரியிடம் ரயில்வே தொழிற் சங்கத்தினர் சந்தித்து, விழுப்புரத்தில் மூடப்பட்டுள்ள ரயில்வே பள்ளியை திறக்க வேண்டும். பராமரிப்பில்லாத ரயில்வே மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்.
ரயில்வே தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதே போல், விழுப்புரம் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் விஜயரங்கம் சத்தித்து, ரயில் நிலையம் அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், விழுப்புரம்- ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கூறி மனு அளித்தார்.
ஆய்வின்போது, ஏ.டி.ஆர்.எம். சத்யாரத்னம் உள்ளிட்ட திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் குழுவினர் உடனிருந்தனர்.

