/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: எஸ்.பி., சாய் பிரணீத் திட்டவட்டம்
/
போதை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: எஸ்.பி., சாய் பிரணீத் திட்டவட்டம்
போதை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: எஸ்.பி., சாய் பிரணீத் திட்டவட்டம்
போதை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: எஸ்.பி., சாய் பிரணீத் திட்டவட்டம்
ADDED : ஜன 04, 2026 04:03 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட புதிய எஸ்.பி.,யாக சாய் பிரணீத் பொறுப்பேற்று கொண்டார்.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த சரவணன், டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., சாய் பிரணீத், விழுப்புரம் மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த 2018 ம் ஆண்டு ஐ.பி.எஸ்., பணியில் சேர்ந்த இவர், செங்கல்பட்டு எஸ்.பி., மதுரை மாநகர துணை ஆணையர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.
அவர் கூறியதாவது:
போதை பொருளான கஞ்சா, குட்காவை பள்ளி மற்றும் கல்லுாரிகள் அருகே விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நேராமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் ஒடுக்கப்படுவர்.
தேர்தல் வரவுள்ள நிலையில் சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
குற்றங்களை உடனுக்குடன் கண்டறிவதோடு, வழக்குகளை சரியான நேரத்தில் விசாரித்து புகார்தாரர்களுக்கு உரிய நியாயம் பெற்றுத்தரப்படும். காவல் துறையினரின் நலனும் காக்கப்படும்.
பொதுமக்களிடம் போலீசார் மனிதாபிமான நடத்தையை மேம்படுத்துதல், குறைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

