நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், மார்ச் 19-
விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறித்து எஸ்.பி., ஆய்வு செய்தார்.
விழுப்புரம் நகரில் நெடுஞ்சாலைகளின் ஓரம் பைக்குகளை பலரும் பார்க்கிங் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, நேற்றிரவு 8:30 மணிக்கு விழுப்புரம் நேருஜி ரோடு, சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறம் இருசக்கர வாகனங்களை போக்குவரத்து இடையூறாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதா என நடந்து சென்று ஆய்வு செய்தார்.
ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா உடனிருந்தார்.