/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரத்தியங்கரா காளிக்கு சிறப்பு அபிஷேகம்
/
பிரத்தியங்கரா காளிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : ஆக 08, 2025 11:53 PM

வானூர் : மொரட்டாண்டி மகா பிரத்தியங்கரா காளிக்கு ஆடிமாத சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகே மொரட்டாண்டியில், மிக உயரமான 72 அடி மகா பிரத்தியங்கரா காளிக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தை முன்னிட்டு, மஞ்சள் அபிஷேகம் நடந்து வருகிறது.
இந்தாண்டுக்கான சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, கோவில் அருகே திரண்ட ஏராளமான பெண்கள், அம்பாளை வேண்டி நீல நிற புடவை அணிந்து, சக்தி கரகம், தீச்சட்டி ஏந்தி, அலகு குத்தி, மஞ்சள் குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
மஞ்சள் குடம் ஊர்வலம் கோவிலை அடைந்தவுடன், அங்கு அம்பாள் மற்றும் 16 அடி உயரம் கொண்ட லட்சுமி நரசிம்மர் சுவாமிக்கு மஞ்சள் குடத்தை கொண்டு அபிஷேகம் செய்தனர்.
பிறகு ஆராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீமத் நடாத்துார் ஜனார்த்தனன் சுவாமிகள் தலைமையில், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.