/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழில் நுட்ப குடிமைப் பணி தேர்வு; சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
/
தொழில் நுட்ப குடிமைப் பணி தேர்வு; சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
தொழில் நுட்ப குடிமைப் பணி தேர்வு; சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
தொழில் நுட்ப குடிமைப் பணி தேர்வு; சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
ADDED : ஆக 06, 2025 01:03 AM
விழுப்புரம்; விழுப்புரத்தில் வரும் 17, 18ம் தேதிகளில், ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் குடிமைப் பணிகள் தேர்வு நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு :
விழுப்புரத்தில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, அரசு கலை கல்லுாரி, வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளி, அக்ஷர்தம் சென்ட்ரல் ( சி.பி.எஸ்.இ) பள்ளி ஆகிய இடங்களில், ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் குடிமைப் பணிகளுக்கான தேர்வு ( நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) நடைபெற உள்ளது.
இதன்படி வரும் 17 ம் தேதி முற்பகல் கொள்குறி (ஓ.எம்.ஆர்.,) தேர்வும், மற்றும் பிற்பகல் மொழி பெயர்ப்பு மற்றும் துல்லியமான எழுத்து விளக்க வகை தேர்வும் நடைபெற உள்ளது. மறுநாள், 18 ம் தேதி முற்பகல் கொள்குறி மற்றும் விரிந்துரைக்கும் வகையான தேர்வு நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள், தேர்வு மையத்திற்கு அனுமதி சீட்டுடன், குறித்த நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும். தேர்வர்கள் ஓ.எம்.ஆர்., தேர்வில் கருப்பு பால் பெயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை கொண்டு வர வேண்டும்.
தேர்வு மையத்திற்குள் மொபைல் போன், எலக்ட்ரானிக் வாட்ச், புளூடூத் போன்ற சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்வதற்காக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.