ADDED : செப் 25, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று நடக்கும் சிறப்பு முகாமில், கைவிரல்ரேகை பதிவினை உறுதிப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், இதுநாள் வரை கைவிரல் ரேகை பதிவு மேற்கொள்ளாத, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் அனைத்து வகை குடும்ப ரேஷன் அட்டைதாரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்று நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி, கைவிரல்ரேகை பதிவினை உறுதிப்படுத்திட வேண்டும்.
பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள், வெளியூரில் அல்லது வெளி மாநிலத்தில் வசித்து வந்தாலும், அவர்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தங்களது கைவிரல்ரேகை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
