/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம், செஞ்சியில் சிறப்பு முகாம்
/
திண்டிவனம், செஞ்சியில் சிறப்பு முகாம்
ADDED : ஆக 06, 2025 01:04 AM
விழுப்புரம்; திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனுார், வானுார், கோலியனுார், முகையூர் பகுதிகளில், இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கிறது.
மாவட்டத்தில் திண்டிவனம் மார்க்கெட் கமிட்டி, கோலியனுார் ஒன்றியம் தோகைப்பாடி சேஷாத்திரி திருமண மண்டபம், வானுார் ஒன்றியம் டி.பரங்கினி பி.பி.எஸ்., மஹால், மேல்மலையனுார் ஒன்றியம் பெருவளூர் கோடீஸ்வரன் கோயில் திருமண மண்டபம், செஞ்சி ஒன்றியம் காட்டுசித்தாமூர் அரசு நடுநிலைப் பள்ளி, முகையூர் ஒன்றியம் அந்திலி அலமேலு நாகராஜன் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடக்கிறது.
இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு, மருத்துவ காப்பீடு அட்டை, ஆதார் சேவை, இ-சேவை போன்ற சேவைகளை பெறலாம் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.