ADDED : மார் 03, 2024 05:28 AM

கண்டமங்கலம்: மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அடிப்படை உரிமைகள் மற்றும் நலத்திட்ட உரிமைகளை பெற்றுத்தர வட்டார அளவில் துறை சார்ந்த அலுவலர்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
கண்டமங்கலம் பி.டி.ஒ., அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினிமுருகன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ராமு, சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மகளிர் மேம்பாட்டு நிறுவன வட்டார இயக்க மேலாளர் கணேசன் வரவேற்றார்.
ஒன்றிய சேர்மன் வாசன் இந்தியன் வங்கி ஊராக சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்த மகளிர் 30 பேருக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சண்முகவள்ளி, பகுதி சுகாதார செவிலியர் இந்திரா உள்ளிட்டோர் அரசின் திட்டங்களை பெற்றுத்தர மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினர்.
