/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவிந்தசாமி கல்லுரியில் சிறப்பு கலந்தாய்வு
/
கோவிந்தசாமி கல்லுரியில் சிறப்பு கலந்தாய்வு
ADDED : ஜூன் 19, 2025 04:42 AM
திண்டிவனம் :  திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுரியில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு நேற்று நடந்தது.
கல்லுாரியில் உள்ள இளநிலை பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 2ம் தேதி முதல் 13ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில், 472 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். பி.காம்., பி.பிஏ.,மற்றும் பி.எஸ்.சி.,ஆகிய பாடங்களில் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்கள் இடம் மட்டும் காலியாகவும், பி.எஸ்.சி.,கணிதம், இயற்பியல், தாவரவியல், புவியமைப்பியல், பி.ஏ.,வரலாறு, தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் அனைத்து பிரிவினருக்கான இடங்கள் காலியாக இருந்தது.
இதையொட்டி முதல் கட்ட கலந்தாய்வை தவறவிட்ட மாணவ, மாணவிகள் கல்லுாரியில் சேர்வதற்காக நேற்று காலை 9.30 மணிக்கு சிறப்பு கலந்தாய்வு நடந்தது. இதில் நுாற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லுாரியின் முதல்வர் தங்கராஜன் தலைமையிலான குழுவினர் முன்னிலையில் மாணவர் சேர்க்கை நடந்தது.

