/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டியல் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்முனைவு முகாம்
/
பட்டியல் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்முனைவு முகாம்
பட்டியல் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்முனைவு முகாம்
பட்டியல் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்முனைவு முகாம்
ADDED : செப் 05, 2025 07:54 AM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் பட்டியல் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்முனைவு விழிப்புணர்வு முகாம்கள் நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
பட்டியல் பழங்குடியினரிடையே தொழில் முனைவு குறித்தும், தொழில் முனைவோர்க்கென தமிழக அரசு செயல்படுத்தி வரும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த பரப்புரை முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
மாவட்ட தொழில் மையம் மூலம், மாவட்ட நிர்வாகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில் பட்டியல் பழங்குடியினத்தவர் நிறைந்த பகுதிகளில் 16 முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இதில் தமிழக அரசின் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்தும், விழுப்புரம் மாவட்டத்தில் வாய்ப்புள்ள தொழில் திட்டங்கள் குறித்தும், தொழில் துவங்குவதற்கான ஆயத்தங்கள், தொழிலை நடத்தவும் மேம்படுத்தவுமான உத்திகள், சந்தைப்படுத்துதல் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்படும். ஆர்வமுள்ள பட்டியல் பழங்குடியினர் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரை நேரடியாகவோ, 04146 -223616, 9443728015, 8925534035, 9698835117 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.