/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உதவித்தொகை பெற சிறப்பு தேர்வு முகாம்
/
உதவித்தொகை பெற சிறப்பு தேர்வு முகாம்
ADDED : ஜன 22, 2024 12:38 AM

விழுப்புரம்- விழுப்புரம் மாடட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, வயது தளர்வு செய்து மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்த முகாமிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி மருத்துவ குழுவினரோடு ஆய்வு செய்தார்.
பின் அவர் கூறியதாவது:
சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, வயது தளர்வு செய்து மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
அரசு, பராமரிப்பு உதவித் தொகை 1,500 ரூபாய் வழங்கி வருகிறது. கல்வி உதவித் தொகையையும் 2 மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் உடையவர்களுக்கும், மாதாந்திர பராமரிப்புத் தொகை மேலும் வழங்கிடும் வகையில், மூன்று மாதத்திற்கு ஒரு முறை வயது தளர்வு முகாமினை நடத்தி, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், உதவித்தொகை கோரி இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்த 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு முகாம் இன்று நடந்தது.
வயது தளர்வு முகாமில், முடநீக்கியல் மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், குழந்தைகள் நலமருத்துவர் ஆகியோர், மாற்றுத்திறன் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து, 40 சதவீதத்திற்கு மேல் உடற்குறைபாடு இருப்பின் அவர்களுக்கு, அரசு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இன்று நடந்த முகாமில் 18 வயதிற்குட்பட்ட 291 மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 259 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்னர். இதில், 113 பேர் மனநலம் பாதிக்கப்பட்டமைக்காக உதவித் தொகை பெறவும், 138 பேர் வயது தளர்வு குழு ஒப்புதலின் பேரில் உதவி தொகை பெற தேர்வாகினர்.
இவ்வாறு கலெக்டர் பழனி கூறினார்.