/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறப்பு கிராம சபை எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
சிறப்பு கிராம சபை எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஜன 27, 2026 04:13 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் ஒன்றியம், மரகதபுரம் ஊராட்சியில், குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் தேவி ரமேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட கூடுதல் கலெக்டர் பத்மஜா தொடங்கி வைத்து, கிராமத்தில் நடந்து வரும் அரசு திட்டப் பணிகள் நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.
ஊராட்சிகள் உதவி இயக்குனர் மஞ்சுளா, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தனர். கோலியனுார் பி.டி.ஓ.,க்கள் ஜெகநாதன், கண்ணன் வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினர் விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள், மரகதபுரம் கிராமத்திற்கு வரும் மெயின் தார்ச்சாலை சேதமடைந்துள்ளதை புதுப்பிக்க வேண்டும், அரசு உயர்நிலை பள்ளியை மே ல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், தொகுப்பு வீடுகளுக்காக காத்திருக்கும் 100க்கும் மேற்பட்டோருக்கு அரசின் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேவறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கண்ணப்பன், கேசவன், ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் வனிதா ஹரிராமன், ஒன்றிய துணை சேர்மன் உதயகுமார், நிர்வாகிகள் ராம், ஆறுமுகம், ஏழுமலை மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

