ADDED : மார் 30, 2025 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; ஆலம்பூண்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் முத்தம்மாள் சேகர் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றி கோரிக்கை மனுக்களை பெற்றார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன், டிலைட் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நீர் நிலைகளை பாதுகாப்பது, மேம்படுத்துவது குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றினர்.