/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிலப்பிரச்னை தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம்
/
நிலப்பிரச்னை தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 02, 2025 06:51 AM
விழுப்புரம்:' விழுப்புரத்தில் நிலப்பிரச்னை தொடர்பான சிறப்பு பொது மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில், திங்கள் கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பல்வேறு மனுக்கள் பெற்று, உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த குறைதீர் முகாமில், அதிகளவில் நிலம் தொடர்பாக அதிகளவில் பொது மக்களிடமிருந்து மனுக்கள் வருகிறது. இதனால், நிலம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணும் வகையில், மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமையன்று நிலம் தொடர்பான சிறப்பு பொது மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (3ம் தேதி) முதல் வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நிலம் தொடர்பான பட்டா மாற்றம், நில ஒப்படை, இலவச வீட்டு மனை பட்டா, ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, நிலம் கையகம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் மட்டும், பொது மக்கள் நேரடியாக வழங்கி பயன்பெறலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.